Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
29 வயதான யோசந்த் ஜெகதீஸ்வரன் என்பவர் Jane St & Trethewey Dr பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் இறுதியாக சனிக்கிழமை (15) மதியம் 12:10 மணியளவில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர் CFMK 918 எனற உரிமத் தகடு (license plate) கொண்ட சாம்பல் நிற Toyota Camry வாகனத்தை செலுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர் காணாமல் போனதான ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழ் பெண்ணான பிரசாந்தி அருச்சுனணுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
28 வயதான பிரஷாந்தி அர்ச்சுனன் என்ற பெண் Jane and Finch West பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்
இவர் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 7:45 மணியளவில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்களை என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.