தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் Quebec மாகாண சபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதா February ஆரம்பத்தில் தேசிய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் François Legault கூறினார்.
இந்த மசோதா சட்டமன்றத்தில் விவாதத்திற்கு விடப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க முடியும் எனவும் தேவைப்பட்டால், மாற்றங்களை முன்மொழிய முடியும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த யோசனை பொது சுகாதாரத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது என சில மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Ontario, Manitoba, Saskatchewan ஆகிய மாகாணங்கள் தடுப்பூசி போடாதவர்கள் மீது வரி விதிக்கப்படாது என கூறிய மாகாணங்களில் அடங்குகின்றன.