கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
அதிகரித்து வரும் COVID தொற்றுகளின் காரணமாக இந்த அறிவுறுத்தல் வெளியானது.
CDC எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டன.
CDC கனடாவிற்கான பயணப் பரிந்துரையை மிக உயர்ந்தது என்ற நான்காவது நிலைக்கு உயர்த்தியது.
கனடா உட்பட உலகளவில் 80 இடங்களை CDC தற்போது நான்காவது நிலையில் பட்டியலிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் குறித்து கனேடிய அரசாங்கம் இன்று உடனடியாக கருத்துகள் எதனையும் தெரிவிக்கவில்லை.அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என குடியிருப்பாளர்களிடம் கடந்த மாதம் கனடா கனடிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.
கடந்த November மாதம் கனடா மற்றும் மெக்சிகோவுடனான நில எல்லைகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது குறிப்பிடத்தக்கது.