தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் தொற்றால் மரணம்

கடந்த இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு Ontario குழந்தைகள் COVID தொற்றால் மரணமடைந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களில் Ontarioவில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறந்தவர்களில் Torontoவில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையும், Wellington மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் அடங்கும் என உள்ளூர் பொது சுகாதார பிரிவுகள் தெரிவித்தன.

தனியுரிமை காரணங்களால் இறந்தவர்கள் குறித்த கூடுதல் விவரங்களை வழங்க முடியவில்லை என  உள்ளூர் பொது சுகாதார பிரிவுகள் கூறின.

இந்த இறப்புகள் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக Ontario மாகாண தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore கூறினார்

ஆனால் இந்த தொற்றால் குழந்தைகளின் இறப்பு மிகவும் அரிதானது என அவர் கூறினார்.

Ontarioவில் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட சில குழந்தைகள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர் எனவும் Dr. Moore தெரிவித்தார்

COVID தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படுவது அரிதாகவே உள்ளது.

தொற்றின் ஆரம்பத்தில் இருந்து, Ontarioவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஒன்பது குழந்தைகள் இறந்துள்ளனர்.

Related posts

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

முடிவுக்கு வந்தது வருமானதுறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Leave a Comment