COVID தொற்றாளர்களுக்கான Albertaவின் தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைந்துள்ளது.
திங்கட்கிழமை (03) முதல், Albertaவில் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யும் குறைந்தது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் 10 நாட்களுக்குப் பதிலாக 5 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
வேகமாக பரவி வரும் Omicron மாறுபாட்டின் எதிரொலியாக சுகாதார அமைச்சர் Jason Copping கடந்த வாரம் இந்த மாற்றத்தை அறிவித்தார்.
இந்த முடிவு முழுமையாக நோய்த்தடுப்பு பெற்றவர்கள் குறைவான தொற்று காலங்களைக் கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என அவர் கூறினார்.
ஐந்து நாள் காலத்தின் முடிவில் அறிகுறிகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட 5நாட்களுக்கு, பொதுவில் எல்லா நேரங்களிலும் முகமூடியை அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடா தவர்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் Copping அறிவித்தார்.