December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

கனடாவில் வியாழக்கிழமை (30) 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள் பதிவாகின.

Quebec தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது.

Quebecகில் 14,188 தொற்றுகளுடன் 9 மரணங்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தது.

Ontarioவில் 13, 807 தொற்றுகளும் 8 மரணங்கள் பதிவாகின.

British Columbia 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை பதிவு செய்தது.

British Columbia 4,383 புதிய தொற்றுக்களையும் ஒரு மரணத்தையும் பதிவு செய்தது.

Alberta 4,000 புதிய தொற்றுகளின் மதிப்பீட்டை அறிவித்தது.

அங்கு வழக்கமான தொற்றின் அறிவிப்புகள் January 4 முதல் மீண்டும் தொடங்கும்.

Manitoba 1, 123 புதிய தொற்றுகளுடன் அதன் அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு பதிவு செய்ததுடன் 3 மரணங்களையும் பதிவு செய்தது.

Saskatchewanனில் 589 தொற்றுகளும் 5 மரணங்களும் பதிவாகின

New Brunswickகில் 572 தொற்றுகள் இரண்டு மரணங்கள் சுகாதார அதிகாரிகளால் பதியப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக Nova Scotiaவில் 500க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன

Nova Scotiaவில் 511 தொற்றுகள் சுகாதார அதிகாரிகளால் பதியப்பட்டது.

Newfoundland and Labradorரும் 349 தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது/

Prince Edward தீவு 169 தொற்றுகளுடன் மீண்டும் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது.

தவிரவும் Northwest Territories 97, Yukon 34 என தொற்றுக்களை பதிவு செய்தது.

கனடாவில் வியாழக்கிழமை மாத்திரம் 39 ஆயிரத்து 822 தொற்றுகள் பதிவாகின.

Related posts

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Lankathas Pathmanathan

கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் Calgary நகரம்

Lankathas Pathmanathan

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாண கோரிக்கையை நிராகரித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment