அதிகரித்து வரும் Omicron பரவலின் மத்தியில் புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மாகாணங்கள் தொடர்ந்தும் அறிவிக்கின்றன.
Ontario புதிய கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை (17) அறிவித்துள்ளது.
ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன் உள்ளகத்தில் ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கவும் Ontario மாகாணம் முடிவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவு 12:01 முதல், வீட்டிற்குள் ஒன்று கூடக்கூடியவர்களின் எண்ணிக்கை 25 பேரிலிருந்து 10 பேராக குறைகிறது.
வெளியில் ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் Ontarioவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 6 ஆயிரமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றைய அறிவிப்பு வெளியானது.
British Colombia மாகாணமும் இன்று புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது.
தனிப்பட்ட சந்திப்புகளுக்காக கூட கூடியவர்களின் எண்ணிக்கை குறைப்பு, உணவகங்களில் உணவருந்துவதற்கான கடுமையான விதிகள், தடுப்பூசி கடவுசீட்டு தேவைகளின் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்குகின்றன.
திங்கட்கிழமை (20) முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய நடவடிக்கைகள் January மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் என இன்று அறிவிக்கப்பட்டது.