தேசியம்
செய்திகள்

ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 900க்கு மேலான நாளாந்த COVID தொற்று பதிவு

Ontarioவில் வியாழக்கிழமை ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக நாளாந்த COVID தொற்றின் எண்ணிக்கை 900க்கு மேல் பதிவானது.
வியாழக்கிழமை 959 புதிய தொற்றுக்கள் பதிவாகின.

வியாழக்கிழமை பதிவான புதிய தொற்றாளர்களில் 48.9 சதவீதமானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் Ontarioவின் மொத்த மக்கள் தொகையில் 23.5 சதவீதம் உள்ளனர்.

கடந்த வாரம் 692 ஆக இருந்த Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரியானது இன்று 851 ஆக அதிகரித்தது.

வியாழக்கிழமை ஏழு மரணங்களும் Ontarioவில் பதிவாகின.

மாகாணத்தின் மருத்துவமனைகள் 296 COVID தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!

Gaya Raja

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் விளையாட்டு அரங்கம்

Lankathas Pathmanathan

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment