அதிக ஆபத்துள்ள கனடியர்கள் மருத்துவ முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது.
COVID தொற்றால் கடுமையான நோய் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவ முகமூடியை அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில சூழ்நிலைகளில் கடுமையான நோய் விளைவுகளை எதிர் கொள்பவர்கள் சுவாசக் கருவியைப் பயன்படுத்துவதையும் கருத்தில் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
COVID நேர்மறை சோதனை செய்தவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள்,
நேர்மறை சோதனை செய்த அல்லது COVID அறிகுறிகளைக் கொண்ட ஒருவரை பராமரிப்பவர்கள்,
நேர்மறை சோதனை செய்த அல்லது COVID அறிகுறிகளைக் கொண்ட ஒருவருடன் நெரிசலான சூழலில் வசிப்பவர்கள்,
மிகவும் கடுமையான நோய் அல்லது COVID விளைவுகளால் ஆபத்தில் உள்ளவர்கள்,
வாழ்க்கைச் சூழ்நிலையின் காரணமாக COVID தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் ஆகியோர் மருத்துவ முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.