பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக இந்த அவசர நிலையை முதல்வர் John Horgan புதன்கிழமை அறிவித்தார்.
இந்த அவசரகால நிலை புதன்கிழமை நண்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளதாக Horgan கூறினார்.
மற்றொரு இயற்கை பேரழிவு காரணமாக British Columbia வாசிகள் கடந்த சில நாட்களாக நம்பமுடியாத அளவில் சவால்களை எதிர்கொண்டதாக கூறிய முதல்வர் Horgan, கனமழை, காற்று, வெள்ளம் என்பன மாகாணத்தின் முழு சமூகங்களையும் அழித்துவிட்டதாக கவலை தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் குறைந்தது ஒருவர் மரணமடைந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக, வரவிருக்கும் நாட்களில் மேலும் இறப்புகளை உறுதிப்படுத்தும் நிலை தோன்றும் எனவும் Horgan கூறினார்.
British Columbia மாகாணத்திற்கான மீட்பு உதவிகள் குறித்து பிரதமர் Justin Trudeauவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரிடன் மாகாணத்தின் சார்பில் கனேடிய ஆயுதப் படைகளின் உதவியைக் கோரியுள்ளதாகவும் முதல்வர் Horgan உறுதிப்படுத்தினார்.