தேசியம்
செய்திகள்

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

முகமூடிகள் அணிந்தும் சமூக இடைவெளியை பேணியும் வியாழக்கிழமை கனடியர்கள் நாடளாவிய ரீதியில் Remembrance தின நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கனேடியர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கல்லறைகளிலும் நினைவுச் சின்னங்களிலும்  நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Ottawaவில், தேசிய போர் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்  நினைவு  நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட பல அரசியல் தலைவர்களும் இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Montrealலில் நடைபெற்ற Remembrance தின நிகழ்வுகளில் கனடாவில் வாழும் மிகவும் வயதான படைவீரர் தனது 110 வயதில் கௌரவிக்கப்பட்டார்.

கௌரவிக்கப்பட்ட Reuben Sinclair, இரண்டாம் உலகப் போரின் போது Royal கனடிய விமானப்படையில் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு COVID தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தடைப்பெற்ற நினைவு தின நிகழ்வுகள் இம்முறை இயல்பு நிலைக்கு திரும்பியது.

கடந்த ஆண்டின் தொற்று காரணமாக நினைவு தின நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு பொது மக்களை அமைப்பாளர்கள் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு ?

Lankathas Pathmanathan

வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment