தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் சில திட்டங்களை இடைநிறுத்தியது Ontario!

COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் திறக்கும் சில திட்டங்களை Ontario மாகாணம் இடைநிறுத்துகிறது.

Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran Moore புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்

November மாதம் 15ஆம் திகதி முதல் சில இடங்களில் திறன் வரம்புகளை நீக்க இருந்த திட்டத்தை Ontario மாகாணம் குறைந்தது 28 நாட்கள் தாமதப்படுத்துகிறது.

மீண்டும் திறக்கும் திட்டத்தை அதிக எச்சரிக்கையுடன் இடைநிறுத்துவதாக வைத்தியர் Moore தெரிவித்தார்.

கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டால், அவை பிராந்திய அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்  அவர் கூறினார்.

சில பொது சுகாதார பிரிவுகளில் கடந்த வாரத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி 502 ஆக உள்ளது.

இது கடந்த வாரத்தில் 379  ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment