February 22, 2025
தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்துடன் கூட்டணி இல்லை: NDP தலைவர்

Liberal – NDP கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவோ அல்லது ஒப்பந்தமோ இல்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் போது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

Liberal – NDP கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மைக் காலமாக  Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole  தெரிவித்து வருகின்றார்.

இந்தக் கூட்டணி கனேடிய பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கூட்டணி குறித்து வெளியாகும் இந்த செய்திகள் O’Toole உருவாக்கும் வதந்திகள் என Singh தெரிவித்தார்.

Liberal – NDP கூட்டணி குறித்த யோசனையை Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland திங்களன்று நிராகரித்திருந்தார்.

ஒரு சிறுபான்மை அரசாங்கத்துடன், எதிர்வரும் 22ஆம் திகதி 44ஆவது கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நாடாளுமன்ற அமர்வின் போது சட்டங்களை இயற்றுவதற்கு, பிரதமர் Justin Trudeauவுக்கு குறைந்தபட்சம் ஒரு கட்சியின் ஆதரவு தேவைப்படும்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது Liberal சிறுபான்மை அரசாங்கத்திற்கு NDP கட்சி ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

Gaya Raja

Manitoba பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது!

Gaya Raja

Brown, Poilievre அணிகளுக்கு இடையில் தொடரும் மோதல்

Leave a Comment