Ontario மாகாணத்தில் வெள்ளிக்கிழமை முதல் அடிப்படை ஊதியம் அதிகரிக்கின்றது.
வெள்ளி முதல் மணித்தியாலத்துக்கான அடிப்படை ஊதியம் 10 சதத்தால் அதிகரிக்கின்றது.
இதன் மூலம் அடிப்படை ஊதியம் தற்போதுள்ள $14.25 இல் இருந்து $14.35 ஆக அதிகரிக்கிறது.
Ontario 1, 2020 அன்று, Ontario மாகாணத்தில் அடிப்படை ஊதியம் $ 14 இல் இருந்து $14.25 ஆக அதிகரித்தது.
அதற்கு முன், January 2018 முதல் அடிப்படை ஊதியம் உயரவில்லை.
January 2018 இல் அடிப்படை ஊதியம் $ 11.60 இல் இருந்து $ 14 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.