கனேடிய அரசாங்கத்தின் முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
முதற்குடியினர் குழந்தைகளுக்கு சேவைகள் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளை மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மத்திய அரசாங்கம் சரியாக குழந்தை மற்றும் குடும்ப சேவைகளுக்கு நிதி அளிக்கவில்லை என கனடா மனித உரிமைகள் தீர்ப்பாயம் 2019ஆம் ஆண்டு Septemberரில் தீர்ப்பளித்தது.
இதன் விளைவாக முதற்குடியினர் குழந்தைகளுக்கு எதிராக வேண்டுமென்றும் பொறுப்பற்ற முறையில் பாகுபாடு காட்டப்பட்டது என தனது தீர்ப்பில் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது.