தேசியம்
செய்திகள்

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

கனடாவில் வியாழக்கிழமை மீண்டும் நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகள் மொத்தம் 4,665 தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்துள்ளது.

Albertaவில் 1,718 தொற்றுகளும் 10 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இவற்றைவிடவும் Ontarioவில் 864 தொற்றுகளும் 3 மரணங்களும், Quebecகில் 782 தொற்றுகளும் 2 மரணங்களும், British Columbiaவில் 706 தொற்றுகளும் 4 மரணங்களும், Saskatchewanனில் 439 தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்கள் வியாழனன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Gaya Raja

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

Gaya Raja

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment