Yves-François Blanchet, (பிறப்பு 16 April 1965) Quebecகின் நலன்களையும், இறையாண்மையை யும் ஊக்குவிக்கும் Bloc Quebecois அரசியல் கட்சியின் தலைவர். Blanchet தலைமையின் கீழ், 2019 பொதுத் தேர்தலில் Bloc Quebecois கட்சி 32 தொகுதிகளை வென்றது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தையும் நாடாளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடத்தையும் பிடித்தது. Beloeil-Chambly தொகுதியில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் 50 சதவி கிதமான வாக்குகளைப் பெற்றார் Blanchet. இந்தத் தொகுதியில் NDP நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த Matthew Dubeபை அவர் வெற்றி கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இவரது தலைமையில் Bloc Quebecois கட்சி மசோதா 96ஐ நிறைவேற்றியது. இது Quebec முதல்வர் Francois Legault அரசியலமைப்பைத் திருத்து வதற்கான திறனையும், Quebecகை பிரெஞ்சுடன் அதன் அதிகாரப்பூர்வ மொழியாக உறுதிப்படுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், Quebec மாகாணம் Liberals,Conservative, Bloc Quebecois என மூன்று கட்சி பந்தயமாக மாறியது. எவ்வாறாயினும், இந்த முறை, Quebecகில் Liberal கட்சியின் முதன்மைப் போட்டியாளராக Bloc Quebecois இருக்கும் என Blanchet நம்புகிறார்.Quebec இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய போர்க்களமாக வடிவம் பெறுகின்றது. இதில் Bloc Quebecois அனைத்து Quebec மாகாணத்திற்கும் சிறந்த பிரதிநிதித்துவமாக ஏன் உள்ளது என்ற விவாதத்தை Blanchet வாக்காளர்கள் முன்வைப்பார். Quebec மாகாணம் தேசியவாதிகளின் சிறந்த தேர்வாக – இல்லையா என்ற கேள்விக்கான
பதிலை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வழங்குவார்கள்.
ரம்யா சேது