Quebecகில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
தடுப்பூசி போடாத சுகாதாரப் பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
சமூக சேவை தொழிலாளர்களும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை மாகாண அரசாங்கம் வலியுறுத்தியது.
Quebecகின் சுகாதார அமைச்சர், முதல்வர், பொது சுகாதார இயக்குனர் ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.
செவ்வாய்கிழமை Quebecகில் 515 புதிய தொற்றுக்கள் பதிவானதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை முதல் 24ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை பதிவான புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்களிடையே பதிவாகி உள்ளது.