கனேடிய மத்திய அரசு இந்த வாரம் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. முழு தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலா போன்ற அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காகவும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நுழைவு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
இது கனடா அரசாங்கத்தின் படிப்படியான எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய அங்கமாகும்.
COVID தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து பெரும்பாலான சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
COVID சுகாதார நடவடிக்கைகள் காரணமாக தாமதங்களை எதிர்பார்க்குமாறு கனடாவின் மிகப்பெரிய பயணிகள் விமான நிலையமான Toronto Pearson சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு நினைவூட்டுகிறது.