February 23, 2025
தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை Alberta புதன்கிழமை பதிவு செய்துள்ளது.

புதன்கிழமை 1,076 புதிய தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின. இது May மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரான அதிகூடிய ஒரு நாளுக்கான தொற்றுக்களின் எண்ணிக்கையாகும்.

புதன்கிழமை ஒரு மரணமும் Albertaவில் பதிவாகியுள்ளது..Alberta மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் உள்ள COVID நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Alberta, வைத்தியசாலைகளில் 284 பேரை அனுமதித்துள்ளது. இது June மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரான அதிக எண்ணிக்கையாகும்.

தவிரவும் புதன்கிழமை British Columbiaவில் 698 தொற்றுகளும் ஒரு மரணமும், Ontarioவில் 660 தொற்றுகளும் ஒரு மரணமும், Quebecகில் 550 தொற்றுகளும் ஒரு மரணமும், Saskatchewanனில் 216 தொற்றுக்களும், Manitobaவில் 105 தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் புதன்கிழமை தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க கோரிக்கை!

Gaya Raja

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Dominic LeBlanc

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment