ஆப்கானிஸ்தானில் இருந்து 1,100க்கும் அதிகமான மக்களை தாம் வெளியேற்றியுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.
தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றுவதற்கு முன்னர் வெளியேற்றப்பட்ட 40 குடும்பங்கள் இப்போது கனடாவில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளதாக குடிவரவு அமைச்சர் Marco Mendicino ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுவரை 12 விமானங்களில் 1,100க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர் என அமைச்சர் கூறினார். இது கனேடிய ஆயுதப்படைகளின் சிறப்பான சேவையின் வெற்றி எனவும் அவர் கூறினார்.
August 4ஆம் திகதி முதல் ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் கனடாவுக்கு வர ஆரம்பித்தனர். ஆனால் காபூல் விமான நிலையத்தில் தலிபான்களின் தடை காரணமாக கனேடிய மீட்பு முயற்சிகள் பல நாட்களுக்கு நிறுத்தப்பட்டன.
வியாழக்கிழமை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பித்த நிலையில், மூன்று விமானங்களில் 400க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக அமைச்சர் Mendicino கூறினார்.