செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட 65 மில்லியன் டொலருக்கான Lotto Max வெற்றிச் சீட்டு Ontarioவில் விற்பனையாகியுள்ளது.
York பிராந்தியத்தில் இந்த வெற்றிச் சீட்டு விற்பனையாகியுள்ளது. தவிரவும் ஒரு மில்லியன் டொலருக்கான ஐந்து Maxmillion வெற்றிச் சீட்டுகளும் விற்பனையாகியுள்ளன.
இவற்றில் மூன்று British Columbiaவிலும், ஒன்று Ontarioவிலும், ஒன்று Prairie மாகாணங்களிலும் விற்பனையாகியுள்ளன.
இதன் மூலம் அடுத்த Lotto Max குலுக்கலுக்காக வெற்றி தொகை 21 மில்லியன் டொலராக இருக்கும்.