Scarboroughவில் நிகழ்ந்த விபத்தில் தமிழ் இளைஞர் பலியானார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:40 மணியளவில் வாகனம் ஒன்று TTC பேருந்துடன் மோதியதில் 23 வயதான இளைஞன் பலியானார்.
பலியானவர் அஸ்வின் சந்திரராஜ் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
Kingston and Port Union சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. Kingston வீதியில் மேற்கு நோக்கி பயணித்த Acura வாகனம் சிவப்பு போக்குவரத்து விளக்கை தாண்டி சென்று பேருந்துடன் மோதியதாக ஆரம்ப விசாரணையின் பின்னர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே வாகனத்தின் ஓட்டுநர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்தின் 61 வயதான ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.