Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று நாட்கள் முன்னதாக மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு Ontario திரும்பியுள்ளது. இதன் மூலம் Ontarioவில் இப்போது பல்வேறு வெளிப்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
Ontario அரசாங்கம் முழு மாகாணத்தையும் முதல் படிக்கு நகர்த்தியுள்ளது. ஆனாலும் உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளுக்கு தங்கள் பிராந்தியத்தை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளது.
அடுத்த படிக்கு முன்னேறுவதற்கு முன்னர் மீள திறக்கும் திட்டத்தின் ஒவ்வொரு படியிலும் குறைந்தது 21 நாட்கள் காத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் Ontario இரண்டாம் படிக்கு July மாதம் 2ஆம் திகதி நகரவுள்ளது.