February 21, 2025
தேசியம்
செய்திகள்

தமிழர் சமூக நிலைய அமைவிடத்திற்கு Toronto மாநகர சபையின் ஏகோபித்த அங்கீகாரம்

Torontoவில் உத்தேச தமிழர் சமூக நிலைய அமைவிடத்தை Toronto மாநகரசபை வெள்ளிக்கிழமை (30) உத்தியோக பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

எதிர்கால தமிழ் சமூக மையம் அமைக்கப்படவுள்ள நிலத்தின் ஒரு பகுதி

வெள்ளிக்கிழமை நகரசபையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ஆதரவாக 23 வாக்குகள் பதிவாகின. எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. இந்த நிலையில் தமிழர் சமூக நிலைய அமைவிடம் Toronto நகரசபையின் ஏகோபித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

முன்னதாக மாநகரசபை கூட்டத்தில் நகர முதல்வர் John Tory  தமிழ் சமூக மையத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

இந்த சமூக நிலைய அமையவுள்ள பகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvieயும் தமிழ் சமூக மையத்தின் முக்கியத்துவத்தை தனது உரையில் வலியுறுத்தினார்

தமிழ் சமூகத்தினர், இந்த  நிலத்தின் பூர்வீக உரித்துக் குடிகள் உட்பட பல உள்ளூர்ச் சமூகத்தினரும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான இடவசதியை ஏற்படுத்துவோம் என இந்த தமிழ் சமூக மையம் வழிபடுத்து குழு உறுதியளித்துள்ளது.

இந்த தமிழ் சமூக நிலையம் 311 Staines வீதியில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Lankathas Pathmanathan

Toronto நகர சபை வரவு செலவு திட்டம் இறுதி செய்யப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment