தேசியம்
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  இறப்புகளின் எண்ணிக்கையும்   அதிகரிக்கலாம் – புதிய எச்சரிக்கை

COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  இறப்புகளின் எண்ணிக்கையும்  வரும் வாரங்களிள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலையுதிர் காலத்திலும்  குளிர்காலத்திலும் குளிர் காய்ச்சல், சுவாச நோய்த் தொற்றுகள் அதிகரிக்கும் எனக்  கூறிய வைத்தியர்  Tam   இது மருத்துவமனைகளில் அதிக சுமையாக அமையும் எனவும் கூறினார்.

COVID காரணமாக October 16 முதல் 22 வரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,010 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 209 பேர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் தினசரி சராசரியாக 23 இறப்புகள் பதிவாகின. ஆறு வாரங்களுக்கு முன்னர் இருந்ததைவிட இது 18 அதிக இறப்புக்களாகும்.

Related posts

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja

சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் கனடா

Lankathas Pathmanathan

Pfizer booster தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

Leave a Comment