February 25, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடனான உறவையும் – பொருளாதார அச்சுறுத்தல்களையும் எவ்வாறு கையாள்வது? – Liberal தலைமை வேட்பாளர்கள் விவாதம்

Liberal கட்சியின் புதிய தலைமை பதவி போட்டிக்கான வேட்பாளர்களின் முதலாவது விவாதம் திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump எச்சரிக்கும் வரி அச்சுறுத்தல் குறித்த கேள்விகளுடன் இந்த விவாதம் ஆரம்பித்தது.

அமெரிக்க ஜனாதிபதியுடனான கொந்தளிப்பான உறவையும் அவரது பொருளாதார போர் அச்சுறுத்தல்களையும் எவ்வாறு கையாள்வார்கள் என்பதை Liberal தலைமை வேட்பாளர்கள் விளக்கினர்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்தது.

இந்த போட்டியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் உள்ளனர்.

இவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களில் ஒன்று திங்களன்று நடைபெற்றது.

இந்த விவாதம் French மொழியில் நடைபெற்றது.

Montreal நகரில் இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த விவாதம் 10 மணி வரை நடைபெற்றது.

இதில் இரண்டாவது விவாதம் ஆங்கில மொழியில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

Liberal கட்சி இந்த இரண்டு விவாதங்களையும் தயாரிக்கிறது.

March 9 ஆம் திகதி பிரதமர் Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ளன.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.

Related posts

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

D-Day நிகழ்வில் பங்கேற்ற France பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Leave a Comment