கனடிய இறக்குமதிக்கு எதிரான வரி அடுத்த வாரம் விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்தார்.
கனடிய இறக்குமதிக்கு எதிரான 25 சதவீத வரி ஒரு மாத கால இடை நிறுத்தத்திற்கு பின்னர் அடுத்த வாரம் விதிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி Donald Trump இந்த தகவலை வெளியிட்டார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி அடுத்த வாரம் விதிக்கப்படும் என Donald Trump திங்கட்கிழமை (24) உறுதிப்படுத்தினார்.
திட்டமிட்டபடி இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.
இந்த மாத ஆரம்பத்தில், எரிசக்தி தவிர ஏனைய கனடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக Donald Trump அச்சுறுத்தினார்.
ஆனாலும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த பிரதமர் Justin Trudeau ஒப்புக் கொண்டதையடுத்து இறுதி நேரத்தில் தனது வரி விதிப்பு எச்சரிக்கையை அவர் 30 நாட்கள் பிற போட்டிருந்தார்.