கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்றார்.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க Donald Trump சில வாரங்களாக எச்சரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் February 1 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என Donald டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
திங்கள் இரவு வெள்ளை மாளிகையில் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது Donald Trump இந்த தகவலை வெளியிட்டார்.
கனடா மீது 25 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ள நாளாக February 1 ஆம் திகதியை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக தனது பதவியேற்பு உரையில், கனடா குறித்து அவர் கருத்து எதையும் வெளியிடவில்லை.
இந்த வரி விதிப்பு அறிவித்தல் வெளியாகினால், அதை எதிர்கொள்ள கனடிய மத்திய அரசு பல திட்டங்களை தயாராக்கி வைத்துள்ளது.