Salmonella பரவல் காரணமாக 5 மாகாணங்களில் 61 பேர் நோய் வாய்ப்பட்டனர்.
இதற்கு காரணமான pastries பண்டங்களை கனடா உணவு ஆய்வு நிறுவனம் – Canada Food Inspection Agency (CFIA) – மீளப் பெற்றுள்ளது.
British Columbia, Alberta, Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் இந்த நோய் பதிவாகியுள்ளது.
நோய்வாய்ப்பட்ட 61 பேரில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் வாய்ப்பட்டவர்களில் வயது குறைந்தவர் மூன்று வயதானவர் எனவும், வயது மூத்தவர் 88 வயதானவர் எனவும் CFIA தெரிவிக்கிறது.