தேசியம்
செய்திகள்

6 மாகாணங்கள், பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கை நடைமுறையில்

கனடாவின் 6 மாகாணங்கள், பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளிர்கால வானிலை Newfoundland and Labrador, Quebec, Ontario, Nunavut, Northwest Territories, Yukon மாகாணங்கள், பிரதேசங்களில் சுற்றுச்சூழல் கனடா மூலம் எச்சரிக்கைகளை தூண்டியது.

இந்த மாகாணங்கள், பிரதேசங்களின் பல சமூகங்களுக்கு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

வியாழக்கிழமை (02) காலை நிலவரப்படி  Newfoundland and Labrador மாகாணத்தில் 22 குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

Quebec மாகாணத்தில் வியாழன் காலை நிலவரப்படி 23 குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

Quebec மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (03) காலை வரை 25 CM வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ontario மாகாணத்தில் வியாழன் காலை நிலவரப்படி 30 குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

Ontario மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ளி இரவு வரை 35 CM வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nunavut, Yukon, Northwest Territories பிரதேசங்களில் காற்றின் குளிர்நிலை முறையே -55, -50, -37 வரை உணரப்பட்டு  என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டு கனடாவில் வானிலை காரணமாக $3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதம்

Lankathas Pathmanathan

இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு 70 வயதான தமிழர் மீது பதிவு!

Gaya Raja

Leave a Comment