December 12, 2024
தேசியம்
செய்திகள்

Canada Post  நிர்வாகம் – தொழிற்சங்கம் இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்திப்பு

Canada Post தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், Canada Post  நிர்வாகத்தை இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்தித்தது.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (09) நடைபெற்றதாக தொழிற்சங்கம் தெரிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்திய பின்னர் இரு தரப்பினரும் முதல் முறையாக திங்களன்று சந்தித்தனர்.

Canada Post நிர்வாகம், வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த சமீபத்திய முன்மொழிவுக்கு தனது திருத்தங்களை கனடிய தபால் ஊழியர் சங்கம் பகிர்ந்து கொண்டது.

தொழிற்சங்கத்தின் சமீபத்திய முன்மொழிவுகளல் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக  என Canada Post  செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என வணிக சமூகத்திடம் இருந்து அழுத்தங்கள் பெருகி வருகின்றன.

ஆனால் இந்த விடயத்தில் இதுவரை அரசு தலையிடவில்லை.

Related posts

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Gaya Raja

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Leave a Comment