December 12, 2024
தேசியம்
செய்திகள்

சீனாவுக்கான சேவையை அதிகரிக்க Air கனடா முடிவு

சீனாவுக்கான தனது விமான சேவையை அதிகரித்து வருவதாக Air கனடா தெரிவித்துள்ளது.

தலைநகர் Beijingகிற்கு தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக Air கனடா அறிவித்துள்ளது.

Vancouver நகரில் இருந்து சீன தலைநகருக்கு January 15 முதல் தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக Air கனடா விமான நிறுவனம் கூறுகிறது.

Vancouver நகரில் இருந்து Shanghai செல்லும் அதன் விமான சேவையை December 7 முதல் தினசரி அதிகரிக்கவும் Air கனடா முடிவு செய்துள்ளது.

Air கனடா தற்போது Vancouverரில் இருந்து Shanghaiக்கு வாரத்தில் நான்கு நாட்கள் விமான சேவைகளை வழங்குகிறது.

COVID பெருந்தொற்றுக்கு முன்னர் 2019 கோடை பயண காலத்தில், Air கனடா Beijing, Shanghai நகரங்களுக்கு வாரத்திற்கு 35 விமான சேவைகளை இயக்கியது குறிப்பிடத்தக்கது

Related posts

Pearson விமான நிலையத்தில் விமானத்தின் கதவைத் திறந்து விழுந்த பயணி

Lankathas Pathmanathan

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment