Saskatchewan கட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசாங்கத்தை வெற்றி பெற்றது.
Saskatchewan மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
61 தொகுதிகளை கொண்ட இந்தத் தேர்தலில் Saskatchewan கட்சி 33 ஆசனங்களை வெற்றி பெற்றது.
கடந்த 17 ஆண்டுகளாக பெரும்பான்மை அரசாங்கத்தை வைத்திருந்த Saskatchewan கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இதன் மூலம் Saskatchewan கட்சித் தலைவர் Scott Moe தொடர்ந்தும் முதல்வராக தெரிவாகிறார்.
இம்முறை பிரதான எதிர்க்கட்சியான NDP 25 ஆசனங்களை வெற்றி பெற்றது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் இம்முறை முன்கூட்டிய வாக்கு பதிவுகள் நிகழ்ந்தன.
மாகாணசபை கலைக்கப்பட்ட போது Saskatchewan கட்சி 42 ஆசனங்களை, NDP 14 ஆசனங்களை கொண்டிருந்தது.
நான்கு தொகுதிகளில் சுயேட்சை உறுப்பினர்களும், ஒன்று தொகுதி வெற்றிடமாக இருந்தது.
இந்தத் தேர்தல் இறுதி முடிவுகள் இந்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.