தேசியம்
செய்திகள்

நெடுந்தெரு 401இன் கீழ் 60 KM சுரங்கப் பாதை?

நெடுந்தெரு 401இன் கீழ் ஒரு சுரங்கப் பாதையை உருவாக்கும் விருப்பத்தை Ontario முதல்வர் வெளியிட்டார்.

நெடுந்தெரு 401இன் கீழ் ஒரு சுரங்கப் பாதையை உருவாக்க உள்ளதாக முதல்வர் Doug Ford அறிவித்தார் .

இந்த சுரங்கப்பாதை Brampton முதல் Scarborough வரை நீடிக்கும் என் அவர் கூறினார்.

கனடாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலையின் கீழ் இந்த  சுரங்கப்பாதையை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை தனது அரசாங்கம் ஆய்வு செய்ய ஆரம்பிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு தேவையான இடவசதி இல்லாமை ஆகியவற்றை இந்த சுரங்கபாதையின் தேவையாக
புதன்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Doug Ford  மேற்கோள் காட்டினார்.

மேற்கில் Brampton முதல்  Mississauga வரையும் கிழக்கில் Markham முதல்  Scarborough வரையும் இந்த சுரங்கப்பாதை முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை இணைக்கும் என் அவர் கூறினார்.

ஆனாலும் இந்த சுரங்கப் பாதைக்கான செலவு குறித்த  மதிப்பீட்டை அவர் வெளியிடவில்லை.

முதல்வரின் இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

சுமார் 60 கிலோ மீட்டர் நீளமுள்ள இதுபோன்ற ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படுமாகின் அது உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக விரையமாகும் பால்

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment