December 12, 2024
தேசியம்
செய்திகள்

தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியது Air Canada

Air Canada விமான நிறுவனம் அதன் விமானிகள் தொழிற்சங்கத்துடன் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

இதன் மூலம் Air Canada விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையிலான நான்கு ஆண்டு தற்காலிக ஒப்பந்தம் குறித்த அறிவித்தல் ஞாயிற்றுக்கிழமை (15) வெளியானது.

5,200க்கும் மேற்பட்ட விமானிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துடன் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளதாக Air Canada விமான நிறுவனம் அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியானது.

இந்த தற்காலிக ஒப்பந்தம் புதன்கிழமை ஆரம்பிக்கக் கூடிய வேலை நிறுத்தத்தை தவிர்த்தது.

புதிய ஒப்பந்தம் குறித்து தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்புதல் வாக்கெடுப்பு நடைபெறும் வரை அதன் விபரங்கள் இரகசியமாக வைத்திருக்கப்படும் என விமானிகள் தொழிற்சங்கம் கூறியது.

இந்த வாக்கெடுப்பு அடுத்த மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை Air கனடா, Air Canada Rouge விமான சேவைகள் வழமை போல் தொடர்ந்து செயல்படும் என தெரியவருகிறது.

Related posts

கனடாவில் COVID தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புதிய modelling விவரங்கள் சுட்டிக்காட்டு!

Gaya Raja

தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாகும் British Colombia

Gaya Raja

நடைபெறவுள்ளது ஒரு நியாயமான தேர்தல் இல்லை: Patrick Brown குற்றச்சாட்டு

Leave a Comment