Paris Olympics ஆரம்ப விழாவில் கனடிய பாடகி Celine Dion இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Eiffel கோபுரத்தில் இருந்து அவர் ஒரு சக்திவாய்ந்த நிகழ்ச்சியை நடத்தி Olympics போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
அவரது இசை நிகழ்ச்சி நான்கு மணி நேரம் நடைபெற்ற Olympics ஆரம்ப விழாவில் இறுதிப் பகுதியாக இருந்தது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் பார்வையிடும் Olympics ஆரம்ப விழாவின் ஒரு பகுதியாக Celine Dion நிகழ்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பல வார காலமாக இருந்து வந்தது.
அவரது நிகழ்ச்சி கனடிய பிரதமர் Justin Trudeauவின் பாராட்டைப் பெற்றது.