September 16, 2024
தேசியம்
செய்திகள்

மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து பேச மறுக்கும் காவல்துறையினர்?

நெடுஞ்சாலை 401 இல் நிகழ்ந்த மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து சிறப்பு புலனாய்வாளர்களிடம் பேச இரண்டு காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.

April 29 நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில்  நால்வர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து Ontario மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU)  விசாரணைகளை முன்னெடுக்கின்றது

ஆனாலும் இந்த விபத்துடன் தொடர்புடைய இரண்டு காவல்துறையினரும் புலனாய்வாளர்களுடன் நேர்காணலுக்கு மறுத்துள்ளனர்.

அதேவேளை சம்பவ தினம் குறித்த தமது குறிப்புகளை புலனாய்வாளர்களிடம் கையளிக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இது அவர்களின் சட்ட உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை (12) வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் SIU இந்த தகவலை வெளியிட்டது.

இந்த விபத்தை Durham பிராந்திய காவல்துறை கையாண்ட முறை குறித்து ஏழு புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக SIU கூறுகிறது.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் SIU தெரிவித்தது.

இதில் 19 சாட்சி அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 36 பொது சாட்சியாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ தினமன்று மாலை 7:50 மணி அளவில் Bowmanville நகரில் நிகழ்ந்த மதுக்கடை கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைக்கு Durham பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் cargo வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றனர்.

காவல்துறையினரால் அந்த வாகனம் பின் தொடரப்பட்டபோது, சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுந்தெருவில் நுழைந்தது.

நெடுஞ்சாலையின் கிழக்குப் பாதையில் மேற்கு நோக்கி பயணித்த சந்தேகத்திற்குரிய வாகனம், பல வாகனங்களுடன் நெடுஞ்சாலை 412 இன் கிழக்கே மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களில் 60 வயதான மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை,  55 வயதான மகாலட்சுமி அனந்தகிருஷ்ணன் ஆகியோரும் அவர்களின் மூன்று மாத பேரன் ஆதித்யா கோகுல்நாதும் அடங்குகின்றனர்.

பலியான குழந்தையின் Ajax நகரை சேர்ந்த பெற்றோர், 33 வயதான தந்தை, 27 வயதான தாய் ஆகியோர் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தனர் என்பதை SIU ஏற்கனவே உறுதிப்படுத்தியது.

இவர்கள் பயணித்த வாகனத்துடன் மோதிய cargo வாகனத்தில் இரண்டு பேர் பயணித்தனர்.

அந்த வாகனத்தின் 21 வயது சாரதி Gagandeep Singh சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

38 வயதான ஆண் பயணி Manpreet Gill, கடுமையான  காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SIU புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

அவருக்கு எதிராக LCBO கொள்ளை சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்து நிகழ்ந்த போது Manpreet Gill பிணையில் விடுதலையாகி இருந்தார் என நீதிமன்ற பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

Related posts

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Longueuil நகர முதல்வர் வெளிப்படுத்தினார்

Lankathas Pathmanathan

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment