தேசியம்
செய்திகள்

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (12) இத்தாலி பயணமாகிறார்.

உலகளாவிய ரீதியில் இரண்டு புவிசார் அரசியல் மோதல்கள் நிகழும் நிலையில் இம்முறை G7 தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மூன்று நாள் உச்சி மாநாடு வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது.

G7 தலைவர்கள் மாநாட்டில் உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு விடயங்களை விவாதிக்கின்றனர்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய G7 நாடுகளின் தலைவர்கள் ஆண்டு தோறும் சந்திக்கின்றனர்.

இம்முறை ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள், செயற்கை நுண்ணறிவு, இடம்பெயர்வு, ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Justin Trudeau உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு G7 உச்சி மாநாட்டை கனடா நடத்த உள்ளது.

சனி (15), ஞாயிற்றுக்கிழமைகளில் (16) சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டிலும் Justin Trudeau கலந்து கொள்கிறார்.

Related posts

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment