December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க 603 மில்லியன் டொலர் ஐந்தாண்டுத் திட்டத்தை Quebec மாகாணம் வெளியிட்டது.

பிரெஞ்சு மொழிக்கான Quebec அமைச்சரவை அமைச்சர் Jean-François Roberge ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் ஒன்பது முன்னுரிமைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பல நடவடிக்கைகள் குடியேற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு மொழி பேசும் பொருளாதார குடியேறியவர்களின் சதவீதத்தை அதிகரிப்பது இதில் ஒரு பிரதான  பகுதியாகும்.

Quebec மாகாண குடியிருப்பாளர்களின் 2016 முதல் 2021 வரை வீட்டில் பிரஞ்சு மொழியைப் பேசுவோர் சதவீதம் குறைந்துள்ளதாக  2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு தெரிவிக்கிறது

இதே கால கட்டத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் 12 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related posts

Canada Post வேலை நிறுத்தம் காரணமாக கடவுச்சீட்டு சேவைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!

Gaya Raja

வெளிநாட்டு தலையீடு குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment