December 12, 2024
தேசியம்
செய்திகள்

Peel காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் குறித்த சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு TGTE அழைப்பு

Peel பிராந்திய காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் தொடர்பாக சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடிய தமிழரான Peel பிராந்திய காவல் துறையின் தலைவர் நிசா ன் துரையப்பா இலங்கைக்கான பயணம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு மேற்கொண்ட இந்த பயணம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சுயாதீன காவல்துறை மீளாய்வு பணிப்பாளர் அலுவலகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) முறையிட்டுள்ளது.

நிசான் துரையப்பாவின் பயணம் குறித்த அதிருப்தியை TGTE வெளியிட்டது.

December மாதம் 29ஆம் திகதி இலங்கை காவல் கண்காணிப்பாளர் Deshabandu Tennakoon உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நிசான் துரையப்பா சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Peel பிராந்திய காவல்துறையின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக இந்த பயணம் குறித்து விசாரிக்குமாறு சுயாதீன காவல்துறை மறு ஆய்வு இயக்குநர் அலுவலகத்தை கனடிய தமிழர்கள் சார்பாக TGTE கோரியுள்ளது.

இந்த விடயத்தில் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த தடைகளை பரிந்துரைக்கவும், தலைமை பதவியில் இருந்து நிசான் துரையப்பாவை நிரந்தரமாக விலக்கவும் TGTE வலியுறுத்துகிறது.

Related posts

பாதியாகக் குறையும் கனடாவின் அடுத்த மாத Pfizer தடுப்பூசி ஏற்றுமதி

Lankathas Pathmanathan

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment