தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து அதிகரிக்கும் வெறுப்புக் குற்றங்கள்

இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து Toronto நகரில் வெறுப்புக் குற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw இந்த தகவலை வெளியிட்டார்.

October மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல்-காசா போர் ஆரம்பித்ததில் இருந்து Torontoவில் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளதை “ஒரு ஆபத்தான போக்கு” என அவர் வர்ணித்தார்.

October 7ஆம் திகதிக்கு பின்னர், இஸ்லாமிய வெறுப்பு அல்லது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் 17 சம்பவங்கள் Toronto முறையிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதே காலப்பகுதியில் 2022 ஆம் ஆண்டு இது போன்ற குற்றங்கள் ஒன்று மாத்திரம் முறையிடப்பட்டன.

கடந்த ஆண்டு இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது, Torontoவில் யூத எதிர்ப்பு வெறுப்புக் குற்றங்கள் 192 சதவீதம் அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

இது இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து Toronto காவல்துறையினரால்  பெறப்பட்ட 79 வெறுப்பு குற்ற அறிக்கையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, யூத எதிர்ப்பு வெறுப்பு குற்ற அறிக்கைகள் 322 சதவீதம் அதிகரித்துள்ளது என  Toronto காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து  Toronto காவல்துறையினரின் வெறுப்புக் குற்றப் பிரிவின் எண்ணிக்கை ஆறிலிருந்து 32 அதிகாரிகளாக உயர்ந்துள்ளது.

வெறுப்பு குற்ற அறிக்கைகள் தொடர்பாக 22 கைதுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 58 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related posts

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja

Ontarioவின் புதிய COVID அவசரகால கட்டுப்பாடுகளின் முழு பட்டியல்:Full list of new COVID emergency restrictions in Ontario

Gaya Raja

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Leave a Comment