தேசியம்
செய்திகள்

தமிழ் இளைஞர் கொலை குற்றவாளி பிணையில் விடுதலை

28 வயதான தமிழ் இளைஞரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அருண் விக்னேஸ்வரராஜா என்ற தமிழ் இளைஞரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட Chard Patrick கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

October மாதம் 15ஆம் திகதி அருண் விக்னேஸ்வரராஜா Ajax நகரில் மதுபான கடை ஒன்றுக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் கைது செய்யப்பட்ட Chard Patrick கடந்த வார இறுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விடயம் குறித்து அருண் விக்னேஸ்வரராஜாவின் குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நீதி துறையின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chard Patrick மீண்டும் March மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

Ontarioவின் digital தடுப்பூசி கடவுச்சீட்டு செயலி!

Gaya Raja

Conservative கட்சி விமர்சகர்கள் பதவியில் மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment