தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை அண்மைக் காலமாக குறைந்து வருகிறது.

November மாத சராசரியுடன் ஒப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை (06) வரை எரிபொருளின் விலைகள் 25 சதத்திற்கு மேல் குறைந்துள்ளன.

தற்போது சராசரியாக எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 140.9 சதமாக உள்ளது.

Toronto பெரும்பாக்கத்தில் இந்த வாரம் எரிபொருளின் விலை மீண்டும் குறையவுள்ளது.

Toronto பெரும்பாக்கத்தில் எரிபொருளின் விலை புதன்கிழமைக்குள் (07) மேலும் மூன்று சதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் எரிபொருளின் சராசரி விலை லிட்டர் ஒன்றிற்கு 140.9 சதமாக குறையவுள்ளது.

இது இந்த ஆண்டின் மிகக் குறைந்த எரிபொருள் விலையாக இருக்கும்.

Ontarioவில் எரிபொருளின் விலைகள் ஒரு மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

Ontarioவின் எரிவாயு வரி குறைப்பை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக மாகாண முதல்வர் Doug Ford அறிவித்ததை அடுத்து இந்த விலை வீழ்ச்சிகள் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Blue Jays அணியின் playoff தொடர் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்தது

Lankathas Pathmanathan

British Colombiaவில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு !

Gaya Raja

Leave a Comment