தேசியம்
செய்திகள்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் வியாழக்கிழமை (03) வெளியிடவுள்ளார்.

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியாகும் திகதியை நிதி அமைச்சு இன்று (28) அறிவித்தது.

கனடாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில் இந்த பொருளாதார நிலை குறித்த அறிக்கை வெளியாகவுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சாத்தியமான மந்த நிலை குறித்த முன்னறிவித்தலை இந்த வாரம் கனடிய மத்திய வங்கி வெளியிட்டது.

இந்த நிலையில் வெளியாகும் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related posts

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிக தொற்றுக்கள்!

Gaya Raja

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment