December 12, 2024
தேசியம்
செய்திகள்

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (23) Fiona சூறாவளியின் வருகை எதிர்வு கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது.

Atlantic கனடாவின் பெரும்பகுதிக்கு கனமழை, காற்று எதிர்பார்க்கப்படும் நிலையில், Fiona சூறாவளி வெள்ளி காலை கரையை கடக்க உள்ளது.

Atlantic கனடாவில் வசிப்பவர்களை புயலுக்கு முன்னதாக அவசர நிலைக்கு தயாராகுமாறு அவசரகால அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை (22) பிற்பகல் வரை, Newfoundland and Labrador மாகாணத்தில் உள்ள 27 சமூகங்களுக்கு வெப்பமண்டல புயல் அல்லது சூறாவளி எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது.

Newfoundland and Labrador மாகாணத்தில் கடும் மழையும் சில பகுதிகளில் பனிப்பொழிவும் எதிர்வு கூறப்படுகிறது.

Fiona சூறாவளி மிகவும் வலிமையானதும் ஆபத்தானதும் என எச்சரிக்கப்படுகிறது.

Related posts

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment