Ontarioவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் அதிகரிக்கிறது.
வியாழக்கிழமை (11) எரிபொருளின் விலை ஒரு சதத்தினாலும் வெள்ளிக்கிழமை 8 சதத்தினாலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது
இதன் மூலம் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 174.9 சதமாக விற்பனையாகும்.
தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை கடந்த வார இறுதியில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.