நாடளாவிய ரீதியில் கனடா தின கொண்டாட்டங்கள் முதற்குடியினரை கௌரவிக்க புதிய அணுகு முறைகளை முன்னெடுக்கின்றன.
பல சமூகங்கள் முதற்குடியினரை அங்கீகரிப்பதற்காக கனடா தின கொண்டாட்டங்களை மறுபரிசீலனை செய்கின்றன.
குறிப்பாக முதற்குடியின பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
கனேடிய பெருமை கொண்டாட்டங்களை முதற்குடி மக்களின் கடினமான வரலாற்றின் பிரதிபலிப்புடன் சமநிலைப்படுத்த நாடளாவிய ரீதியில் கனடா தின கொண்டாட்ட அமைப்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.