உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரியானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
ரஷ்யாவின் நடவடிக்கையை இனப்படுகொலை என வகைப்படுத்துவதை பிரதமர் வரவேற்கிறார்.
போர்க்குற்றங்கள், பிற மனித உரிமை மீறல்கள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது முற்றிலும் சரியானது என Trudeau தெரிவித்தார்.
ஆனாலும் அதற்கு அதிகாரபூர்வ செயல்முறை இருப்பதாகக் கூறி, பிரதமர் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை தவிர்த்தார்.
ICC எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்ய போர்க் குற்றங்கள் குறித்து விசாரிபாபது, ICCக்கு RCMP புலனாய்வாளர்களை அனுப்புவது உட்பட கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் தெரிவித்தார்.
உக்ரைனில் நிகழ்வது ஒரு இனப் படுகொலையாக தன் கண்களுக்குத் தோன்றியதாக அமெரிக்க அதிபர் Joe Biden நேற்று கூறியிருந்தார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் இனப் படுகொலைக்கான சர்வதேச தரத்தை எதிர்கொள்கிறதா என்பதை வழக்கறிஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என கனடிய அமெரிக்கா தலைவர்கள் கூறினர்.