தேசியம்
செய்திகள்

Ontarioவில் நாளாந்தம் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம்!

Ontarioவில் நாளாந்தம் 1 முதல் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது மாகாணத்தின் குடியிருப்பாளர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Ontarioவில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மாகாணத்தில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 35 முதல் 40 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

புதன்கிழமை (07) காலை வரை Ontario மருத்துவமனைகளில் 1,074 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், தொற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள உயர்வு எதிர்பாராதது அல்ல என முதல்வர் Doug Ford வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியது

வட்டி விகிதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

Lankathas Pathmanathan

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan

Leave a Comment